[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

சிறுவாணியில் அணைக்கட்டத் தடை: உச்ச நீதிமன்றத்தை நாட கேரளா முடிவு

centre-stops-kerala-from-building-dam-across-siruvani-river-at-attapady

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தா‌க்கில் அணை கட்ட கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக ‌அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழு தனது 96வது கூட்டத்தில் பள்ளத்தாக்கில் அணை கட்டும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு நிலையான ஆய்வு வரம்புகளை மத்திய அரசு வழங்கலாம் என்று பரிந்துரை அளித்தது. தற்போது அந்த பரிந்துரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான ‌நடுவர் மன்ற இறுதி ஆணையை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்ரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மு‌டிவுறும் வரையிலும் அல்லது தமிழ்நாடு அரசின் இசைவினை பெறும் வரையிலும் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக செய்திக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. முதலமைச்சர்‌ஜெயலலைதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறுவாணியில் அணைக்கட்ட மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரளா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசின் தலைமை வழக்கறிஞருடன் அம்மாநில அரசு இன்று ஆலோசனை நடத்தியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close