பாகிஸ்தான் படைகள் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இன்றும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ தாக்குதலுக்குப்பின் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 60–க்கும் மேற்பட்ட தாக்குதலை நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இன்றும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. ஜம்மு, சம்பா, பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து சிறிய ரக பீரங்கிகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 19 வயது இளம் பெண், 2 சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவத் தரப்பில் இருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 2 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் தங்கள் பகுதியில் இந்தியப் படைகள் அத்துமீறி தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றச்சாட்டியுள்ளது.
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோரம் வசிக்கும் கிராம மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டுவிட்டு பாதுகாப்பிற்காக வெளியேறி வருகின்றனர்.
கடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு
ரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்
எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி