[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

புதுச்சேரியில் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி?: நாளை முக்கிய முடிவு

bjp-nr-congress-alliance-in-puducherry

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான நாராயணசாமியை தோற்கடிக்க பாரதிய ஜனதா கட்சி புது வியூகத்தை கையாள உள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு வரும் 19-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி முதலமைச்சரான நாராயணசாமி போட்டியிடுகிறார். நாராயணசாமி இத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே முதலமைச்சராக தனது பதவியை தொடர முடியும். இல்லையென்றால் அவரின் முதலமைச்சர் பதவி பறிபோகும்.

எனவே, நாராயணசாமியை வீழ்த்த பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. முதலில் புதுச்சேரியில் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கூட்டணி முடிவு இறுதியாகவில்லை. இந்நிலையில் பாஜக என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நாளை முக்கிய முடிவு எடுக்க உள்ளது. இத்தகவலை புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவுறுத்தலின் பேரிலேயே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி கூட்டணிக்கு நாளை ஒத்துழைப்பு அளிக்கும்பட்சத்தில் இந்த கூட்டணி முடிவு இறுதியாகும். ஒருவேளை கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டால் இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close