[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

காஷ்மீரின் ராம்கர் பகுதியில் பாக். அத்துமீறி குண்டு‌வீச்சு: 3 பேர் உயிரிழப்பு

3-civilian-killed-in-ceasefire-violation-by-pakistan-in-ramgarh-sector-of-samba-district-jammu-and-k

ஜம்மு- காஷ்மீரின் ராம்கர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி குண்டு‌வீசியதில் 3 பேர் உயிரிழந்தனர்

பாகிஸ்தான் படைகள் காஷ்மீர் எல்லைப் பகுதியில் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தின. இதில் சம்பா மாவட்டம் ராம்கர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் உயிரிழந்தார். ஆர்னியா என்ற ஊரில் இருவர் காயம் அடைந்தனர். அதிகாலை நடந்த இத்தாக்குதலில் இந்திய ராணுவத் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக பாதுகாப்புத் துறை துறை செய்தித் தொடர்பாளர் மணீஷ் மேத்தா தெரிவித்தார். இந்நிலையில் சம்பா மாவட்டத்தில் ராம்கர் பகுதியில்பா கிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் மேலும் 2 சிறுவர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தங்கள் பகுதியில் இந்தியப் படைகள் அத்துமீறி தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றச்சாட்டியுள்ளது. நக்யால் என்ற இடத்தில் நடந்த இத்தாக்குதலில் ஒரு பெண் உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close