[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்னை: நவ.2-ல் அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை

india-sl-fishermen-talks-on-nov-2

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை டெல்லியில் நவம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது.

இருநாட்டு அமைச்சர்கள் அள‌வில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் மீ‌னவ அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இதில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட 10 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கின்றனர்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா தலைமையிலான குழுவினர் பங்கேற்பர் என்று தெரிகிறது. முன்னதாக இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இருநாட்டு மீனவர்கள் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று கூறியிருந்தார். பிரதமர் மோடியைச் சந்திந்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close