[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

உலகச் சாதனையை நோக்கி இஸ்ரோ..ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைக்கோள்களை ஏவத் திட்டம்

isro-s-world-record-bid-launching-83-satellites-on-single-rocket

ஒரே ராக்கெட் மூலம் 83 செயற்கைக்கோள்களை ஏவ இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

வரும் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 83 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதன் மூலம் ஒரே ராக்கெட் மூலம் அதிக செயற்கைக்கோள்களை ஏவிய உலகச் சாதனையை இஸ்ரோ படைக்கும். இதுகுறித்து பேசிய இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸின் தலைவர் ராகேஷ் சசிபூஷன், ஒரே நேரத்தில் விண்வெளிக்கு ஏவப்படும் 83 செயற்கைக்கோள்களும் ஒரே சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 2 செயற்கைக் கோள்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 81 செயற்கைக் கோள்களும் ஒரே ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளன. மொத்தம் 1,600 கிலோ எடை கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ள இந்த சோதனை வெற்றியடையும் பட்சத்தில் ரஷ்யாவின் சாதனையை இஸ்ரோ முறியடிக்கும். கடந்த 2014ம் ஆண்டில் ஒரே செயற்கைக் கோளில் 34 செயற்கைக் கோள்களை ரஷ்யா ஏவியிருந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close