[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

தொடர்ந்து 3ஆவது ஆண்டாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

pm-narendra-modi-celebrates-diwali-with-jawans

இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இமாசலப் பிரதேச மாநிலம் கின்னாரில் உள்ள ராணுவ முகாமில் வீரர்களை பிரதமர் சந்தித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். வீரர்கள் சிலருக்கு மோடி இனிப்புக்களை ஊட்டிவிட்டார். பதிலுக்கு வீரர்களும் பிரதமருக்கு இனிப்பு ஊட்டினர். அப்போது, இந்திய திபெத்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களையும் பிரதமர் சந்தித்தார்.

‌ராணுவ முகா‌முக்கு செல்லும் முன் அருகிலுள்ள சாங்கோ என்ற கிராமத்துக்கு சென்ற மோடி அங்குள்ள மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்படாமல் நடந்தது. தீபாவளியை ஒட்டி இந்திய ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து அனுப்பிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் மோடி, தொடர்ந்து முன்றாவது ஆண்டாக தீபாவளிப் பண்டிகையை எல்லைப் பகுதியிலுள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close