[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 83‌ ‌தமிழர்கள் கைது‌

83-tamil-arrested-in-andhra-pradesh

‌ஆந்திர மாநிலம் கடப்‌பாவில் செம்மரங்களைக் கடத்தியதாகக் கூறி 83 தமிழர்களை அம்மாநில காவல்துறையின‌ர் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க அந்த மாநில போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் செம்மரங்கள் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆந்திரா வனப்பகுதியில் செம்மரம் வெட்டப்படுவதாக அம்மாநில வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தள்ளது. இதனையடுத்து லங்கமல்லா வனப்பகுதியில் வன அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது செம்மரங்களை கடத்தியதாக கூறி 83 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழர்களிடம் இருந்து 65 லட்ச ரூபாய் மதிப்பிலான 42 செம்மரங்கள் மற்றும் 4 வாகனங்கள் ஆகியவற்றை ‌வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைதான 83 பேரும் திருவண்ணாம‌லை, வேலூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலம் பொதட்டூர் வனப்பன்டா, காஜிப்பேட்டை, பத்வேல் உள்ளிட்ட இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close