[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

ஆந்திராவை நோக்கி நகர்ந்தது கியான்ட் புயல்: நாளை கரையைக் கடக்கிறது

alert-for-cyclonic-storm-kyant

வங்க கடலில் உருவான கியான்ட் புயல் வலுவிழந்த நிலையில் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நாளை ஆந்திர கடற்கரையை கடக்கும் என‌வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், தெலுங்கானா மற்றும் தெற்கு ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றத்துடன் இருப்பதால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே கியான்ட் புயல் வலுவிழந்தாலும் நாகையில் கடல் சீற்றத்துடனே காணப்படுகிறது. இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 1ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தான்பேட்டை, நம்பியார்நகர், கல்லார் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை. தொடர்ந்து 4 நாட்களுக்கு மேலாக கடலுக்கு செல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close