[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

தீபாவளி புதுவரவு...ராணுவத்தின் ’சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ராக்கெட்’

cracker-boxes-with-surgical-strikes-cover-hit-among-buyers-this-diwali

தீபாவளி பண்டிகையின்போது அரசியல்வாதிகள் பெயரில் பட்டாசுகள் வெளிவருவது புதிதல்ல, ஆனால், இந்த ஆண்டு ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பெயரிலும் பட்டாசுகள் அறிமுகமாகியுள்ளன.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பெயரில் அறிமுகமாகியுள்ள பட்டாசுகளே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பெயரிலான பட்டாசுகளும் விற்பனையில் கலக்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாரணாசியில் பட்டாசு விற்பனை செய்யும் ஒருவர் கூறுகையில், ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பெயரிலான ராக்கெட் வெடி மற்றும் பிரதமர் மோடி பெயரிலான அணுகுண்டு வெடி போன்றவை பொதுமக்கள் விரும்பி வாங்கும் பட்டாசுகளாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், உத்தரப்பிரதேச மாநில சமாஜ்வாதிக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளைக் குறிக்கும் வகையிலும் அலகாபாத் மற்றும் லக்னோவில் பட்டாசுகள் விற்பனையாகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close