[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

டெல்லியில் பொது இடங்களில் மது அருந்தினால் அபராதம்: மணிஷ் சிசோடியா

now-people-consuming-alcohol-in-public-places-will-face-heavy-fines-in-delhi

பொது இடங்களிலோ அல்லது மதுக்கடைகளுக்கு அருகிலோ மது அருந்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தேவைப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பொது இடங்களில் மது அருந்துவதற்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரமாக களமிறங்கி உள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, பொது இடங்களில் மது அருந்துவதற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை வரும் நவம்பர் 7-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார். அந்த சமயத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

நவம்பர் மாதம் 7-ஆம் தேதிக்கு பிறகு பொது இடங்களில் மது அருந்தினால் அவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் எனவும், அபராத விதிகளை மீறுவோருக்கு தேவைப்பட்டால் ரூபாய் 10,000 அபராதத்துடன் 3 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close