[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

6 மணி நேரம் ஆம்புலன்ஸ் தாமதம்..! உ.பியில் தமிழக பேராசிரியர் உயிரிழப்பு

professor-died-in-up-because-of-ambulance

உத்தரபிரதேசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்திரபிரதேசம் அலிகார் பல்கலைக்கழகத்தில் தமிழ் பிரிவு தலைவராக வேலூரைச் சேர்ந்த பேராசிரியர் மூர்த்தி பணி‌புரிந்து வந்துள்ள‌ர். கடும் வயிற்று வலி காரணமாக ஜவஹர்லால் நேரு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி ஒன்று அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தும் வலி குறையாததால் மேல் சிகிச்சைக்காக அவரை டெல்லி கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனால், ஆம்புலன்சை ஏற்பாடு செய்ய 6 மணி நேரம் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேராசிரியர் மூர்த்தி உயிரிழந்தார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என சகப்பேராசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. பேராசிரியர் மூர்த்தியின் உடல் சென்னை வழியாக சொந்த ஊரான வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவ கல்லூரிக்கு அவ‌ரது உடல் தானமாக வழங்கப்பட உள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close