[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

pakistan-violates-ceasefire-in-rs-pura

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய, ஆர்.எஸ்.புரா பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய பாதுகாப்புப் படைகளின் நிலைகளை குறிவைத்து இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு இந்திய தரப்பில் இருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், எல்லைப் பகுதி நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக, இந்திய பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

இதனிடையே, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து, ஜம்முவில், சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close