[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

சமாஜ்வாதி கட்சிக்குள் வலுக்கிறது மோதல்... 4 அமைச்சர்களை நீக்கி அகிலேஷ் யாதவ் உத்தரவு

akhilesh-yadav-sacked-four-ministers

உத்தர‌ப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்குள் மோதல் வலுத்து வரும் நிலையில், 4 அமைச்சர்களை முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முலாயம் சிங் யாதவின் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் தற்போது கட்சிக்குள்ளும் எதிரொலித்துள்ளது.

அகிலேஷ் யாதவின் ஆதரவாளரை சமாஜ்வாதி கட்சியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக அவரது சித்தப்பாவான ஷிவ்பால் யாதவ் அதிரடியாக நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த, அகிலேஷ் யாதவ், தனது சித்தப்பா ஷிவ்பால் யாதவை அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும் ஷிவ்பால் யாதவுக்கு ஆதரவாக செயல்பட்ட 3 அமைச்சர்களையும் அமைச்சரவையில் இருந்து ‌நீக்கியுள்ளார். கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவருடனும் அகிலேஷ் யாதவ் ஆலோசனை நடத்தி இந்த முடிவினை அறிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக தனது அதிகாரத்தை அரசுக்குள் செலுத்தி வரும் நிலையில், அவரது சித்தப்பாவான ஷிவ்பால் யாதவ் சமாஜ்வாதி கட்சிக்குள் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் முலாயம் சிங் யாதவ் தற்போது வரை தனது சகோதரனான ஷிவ்பால் யாதவ்விற்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

கட்சிக்குள் இருக்கும் உட்பூசலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி ஈடுபட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஓரளவிற்கு இடங்களை கைப்பற்றி இருந்தது. இதனை எப்படியாவது சட்டமன்றத் தேர்தலில் அதிகரித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் அக்கட்சியும் களமிறங்கியுள்ளது. எவ்வாறாயினும் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் முதலமைச்சராக அகிலேஷ் யாதவ் வருவதற்கு வாய்ப்பு குறைவே என கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close