[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

பீகார் துணை முதலமைச்சருக்கு வாட்ஸ்-அப்பில் வந்த 44,000 காதல் அழைப்புகள்..!

bihar-deputy-cm-tejaswi-yadav-gets-44-000-marriage-proposals-on-whatsapp

ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஸ்வி யாதவ், தற்போது பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக உள்ளார். அவருக்கு வாட்ஸ்-அப் மூலம் சுமார் 44,000 காதல் அழைப்புகள் வந்து குவிந்துள்ளது.

தேஜாஸ்வி யாதவ்-வின் தொலைபேசி எண் பல பெண்களின் திருமண தகவல் மையமாக மாறிவிட்டது என்றே கூறலாம்..! அந்த காதல் மன்னனுக்கு பெண்கள் வெறும் காதல் வலை மட்டும் வீசவில்லை.. தங்களுடைய நிறம், கலர், உயரம் போன்ற முழு விவரத்தையும் குறுஞ்செய்தி செய்தி மூலமாக அனுப்பியுள்ளனர்.

பீகாரில் சாலைகள் பழுதாகி இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வெளியிடப்பட்ட அவரது செல்போன் எண் தற்போது பல பெண்களின் இதயத்தை பழுதாக்கிவிட்டது. சுமார் 47,000 குறுஞ்செய்திகள் இதுவரை அவரது எண்ணுக்கு வந்துள்ளது. அதில் 44,000 செய்தி காதல் செய்திகள் தான்..!

இதற்கு முன் தேஜாஸ்வி கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்துள்ளார். இந்த காதல் அழைப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் தேஜாஸ்வி கூறுகையில், நன்றி கடவுளே, நான் இப்போதும் தனிமையாக இருக்க விரும்புகிறேன். மேலும் வீட்டில் பெற்றோர் பார்க்கும் பெண்ணையே தான் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றேன் என்று கூறியுள்ளார்.

பல பெண்களின் மனதை கொள்ளை கொண்ட தேஜாஸ்வி, வீட்டில் பார்க்கும் பெண்ணையே தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியது அவருக்கு காதல் வலை வீசிய பெண்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close