[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

வாக்களிப்பதை கட்டாயமாக்குவது சாத்தியமல்ல.. தலைமைத் தேர்தல் ஆணையர் கருத்து

election-commissioner-remarks-about-compulsory-polling

வாக்களிப்பதை கட்டாயமாக்கும் யோசனை நடைமுறையில் சாத்தியமானதல்ல என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வாக்களிப்பது கட்டாயம் என்று சில நாடுகளில் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். எனினும் அதுபற்றி நம்நாட்டில் பலமுறை ஆலோசிக்கப்பட்டதாகவும் மேலும் வருங்காலங்களில் அதுகுறித்து விவாதிப்பதில் தவறில்லை எனவும் குறிப்பிட்டார். ஆனால், வாக்களிப்பதை கட்டாயமாக்குவது என்ற யோசனை நடைமுறையில் இந்தியாவில் சாத்தியமானது அல்ல என்றும் தெரிவித்தார்.

வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. எனவே, வாக்குப் பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும் வகையில் அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்து வருகின்றன. எனினும், இந்த யோசனையை மக்களவை ஏற்கனவே நிராகரித்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரும் இப்போது எதிரான கருத்தையே தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close