[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

தமிழகம்,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான போலி வழக்கறிஞர்கள்..பார்கவுன்சில் அறிக்கை

fake-lawyers-was-increased-in-tamilnadu-and-puducherry

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் அதிக அளவிலான போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநில பார் கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம், புதுச்சேரி, டெல்லி, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் அதிக அளவிலான போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக இந்திய பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளித்த தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பு வழக்கறிஞர், புதிய வழக்கறிஞர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை சரிபார்க்க ஆயிரத்து 500 ரூபாய் வரை சட்ட பல்கலைக்கழகங்கள் வசூலிப்பதாக புகார் தெரிவித்தார்.

இதைக்கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாடு முழுவதுமுள்ள சட்டப் பல்கலைக்கழகங்களை எதிர் மனுதாரராக வழக்கில் சேர்க்குமாறு உத்தரவிட்டனர். மாநில பார் கவுன்சில் தேர்தல் தொடர்பாக நாளை முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close