[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

பாகிஸ்தானுடன் உறவை துண்டிக்க வேண்டும்.. கிரிக்கெட் வீரர் கம்பீர் கருத்து

kambeer-said-indian-vitality-is-more-than-impotant-compare-to-indian-cricket-competition

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை தான் நினைத்துக்கூட பார்ப்பதில்லை என கூறினார். கிரிக்கெட் போட்டிகளைவிட இந்தியர்களின் உயிர்தான் முக்கியம் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டையும், அரசியலையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று கூறுபவர்கள், முதலில் ராணுவத்தில் சேர வேண்டும் ‌என கம்பீர் கூறியுள்ளார். உரி தாக்குதலையடுத்து, பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோரைத் தொடர்ந்து, கவுதம் கம்பீரும் தற்போதைய நிலையில் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் தொடர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close