[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகளில் விற்பனை நிறுத்தம்

tamilanadu-petrolbunk-strick-at-tody-night-7pm

கமிஷன் தொகையை உயர்த்தித் தரக்கோரி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் இன்று இரவு 7 மணி முதல் 15 நிமிடங்களுக்கு விற்பனையை நிறுத்திவைக்க முடிவெடுத்திருப்பதாக பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்திவரும் நிலையில், மத்திய அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 4,500 பெட்ரோல் நிலையங்களும், நாடுமுழுவதும் உள்ள 54,000 பெட்ரோல் பங்குகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 7 மணி முதல் 15 நிமிடத்திற்கு பெட்ரோல் விற்பனையை நிறுத்தி வைப்பதுடன், மின் விளக்குகளையும் அணைத்து, தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்ட உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close