[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

ஒடிசா மருத்துவமனை தீ விபத்துக்கு என்ன காரணம்: நேரில் பார்த்தவர் பேட்டி

odisha-cm-naveen-patnaik-orders-rdc-inquiry-into-hospital-fire

ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரில் தனியாருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது டயாலிசிஸ் வார்டில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த அவசரச்சிகிச்சைப் பிரிவுக்கும் பரவியது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 40க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக வருவாய் கோட்ட ஆணையர் தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதா‌க ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத‌தினரை சந்தித்து நேரில் அனுதாபம் தெரிவித்த நவீன் பட்நாயக், காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார். படுகாயமடைந்தவர்களின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், தரமான சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டார். தீ விபத்து நடந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்ற ஒடிஷா தலைமைச்செயலாளர் ஆதித்ய பதி, சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் கேட்டறிந்தார். இதனிடையே தீ விபத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில் ‘ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது. குழாயில் ஏற்பட்ட உடைப்பை தனியார் மருத்துவமனை ஊழியர்கள் சரியாக கவனிக்காததாலேயே பெரிய அளவில் விபத்து நேரிட்டது. மருத்துவமனைகளை முறையாக கண்காணிக்காத அரசும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close