[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

அரசு மருத்துவமனையின் அலட்சியம்... எலி கடித்து பச்சிளங்குழந்தை உயிரிழப்பு

newborn-dies-nibbled-by-rats-at-hospital-in-jammu-and-kashmir

ஜம்மு- காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பிறந்து சிலநாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலி கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சத்துரு கிராமத்தை சேர்ந்த குலாம் உசேனின் மனைவிக்கு ஆண் குழந்தை கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிறந்தது. குழந்தை பலவீனமாக இருப்பதாக கூறி ஒருநாள் முழுவதும் தாய் மற்றும் குழந்தையை சிறப்பு அறையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டனர். அதன்பின் பொது வார்டுக்கு மாற்றப்பட்டனர். குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வந்த உசேன், குழந்தையின் உடலில் எலி கடித்ததற்கான தடங்களுடன் அசைவற்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து மாவட்ட சுகாதார இயக்குனர் குர்ஜித் சிங் கூறுகையில், ‘அந்த குழந்தை ஏற்கனவே உடல்நல குறைவுடன் பிறந்ததாகத் தெரிவித்தார். அதோடு, தொப்புள் கொடி வெட்டப்பட்ட இடத்தில் எலி கடித்ததால் குழந்தை இறந்ததாகவும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனையின் சுகாதாரத்தை பேணாத அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close