[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பிரதமர் மோடி- இலங்கை அதிபர் சந்திப்பு.. மீனவர் பிரச்னை குறித்து ஆலோசனை

pm-modi-sri-lanka-president-meets

பிரதமர் நரேந்திர மோடியைச் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன சந்தித்து பேசினார்.

8-ஆவது முறையாக நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. கோவாவில் நேற்று தொடங்கிய மாநாட்டில் பிரிக்ஸின் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டில் இலங்கை‌ அதிபர் மைத்ரிபால சிறிசேன பார்வையாளராகப் பங்கேற்றுள்ளார். இதற்காக இந்தியா வந்துள்ள சிறிசேன, பிரதமர் மோடியை இன்று ‌காலை சந்தித்துப் பேசினார்.

அப்போது, இரு நாடுகளிடையேயான மீனவர் பிரச்னை, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ‌இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். உலகளவில் பெருகி வரும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர். அண்மையில், டெல்லி வந்த‌ இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் மோடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close