[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

pakistan-violates-ceasefire-along-loc

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அவற்றை தகர்த்தழித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் படையினர், எல்லையில் சிறிய அளவிலான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பலதிடியும் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்ஷெரா பகுதியிலுள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே, இன்று காலை 4 இந்திய முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், சிறியவகை எறிகணைகளைக் கொண்டும் தாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close