[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ஜம்மு காஷ்மீரில் தொடரும் ஊரடங்கு உத்தரவு: 100 நாட்கள் நிறைவு

jammu-kashmir-curfew-continue-for-100th-day

ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவு பெறுகிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்படுவதும், பின்னர் மீண்டும் அமல்படுத்தப்படு‌வதும் தொடர்கிறது.

ஜம்மு காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி பர்கான் வானியை கடந்த ஜுலை மாதம் 8-ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து பல இடங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று வரை தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமலும், இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர் மோதலில், இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, பிரச்னைக்குத் தீர்வுகாண ‌விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்துக் கட்சி சார்பில் காஷ்மீர் சென்று வந்‌த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close