[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

இந்தியா, ரஷ்யா உச்சி மாநாடு...கூடங்குளம் 3, 4வது அணு உலை பணி தொடக்கம்

india-russia-summit

கூடங்குளத்தில் 3 மற்றும் 4 வது அணுஉலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தியா, ரஷ்யா இடையே கோவாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் காணொலி காட்சியில் இதைத் தொடங்கி வைத்தனர்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு கோவாவில் இன்று தொடங்குகிறது. இரு நாட்கள் நடக்கவுள்ள இம்மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜிங்பின், பிரேசில் அதிபர் மைக்கேல் டெர்மர் மற்றும் தென்னாப்ரிக்க நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் முதல் நிகழ்வாக இன்று இந்தியா - ரஷ்யா வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் மோடி, புடின் கலந்து கொண்டனர். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு மற்றும் ஆலோசனைக்கு பிறகு இந்தியா - ரஷ்யா இடையே 16 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. எரிசக்தி, பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா, ரஷ்யா இடையேயான உறவு அளவிட முடியாதது என்று தெரிவித்தார். வர்த்தகம், தொழில் மற்றும் பொருளாதாரத் துறையில் இந்தியாவும் ரஷ்யாவும் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளன. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவைப் போலவே ரஷ்யாவின் உறுதியை நம்புவதாக கூறிய பிரதமர் மோடி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுப்பதில் இந்தியாவுக்கு ரஷ்யாவின் ஆதரவு தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ராணுவம், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைப் பிரிவுகளில் இருநாடுகளின் நிறுவனங்களும் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அப்போது பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுடன் நெருங்கிய உறவை ரஷ்யா எப்போதுமே விரும்புவதாக தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close