[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

தலாக்கிற்கு எதிரான அரசின் நிலை சரியானதே: ரவிசங்கர் பிரசாத்

uniform-civil-code-issue-government-s-position-is-correct-ravi-shankar-prasad

தலாக் நடைமுறைக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாடு சரியானதே என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரி‌வித்துள்ளார்.

அனைவர்க்கும் பொதுவான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது குறித்த மத்திய சட்ட வாரியம் பொது மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது. இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, 3 முறை தலாக் சொல்லும் நடைமுறை விவகாரத்தை பொது சிவில் சட்டத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள் இரண்டும் தனித்தனியானவை எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாகிஸ்தான், ஈரான் போன்ற ‌இஸ்லாமிய நாடுகள் தலாக் விவகாரத்தில் விதிகளை சீரமைத்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், இந்தியாவில் தலாக் விதிகளில் ‌சீர்திருத்தம் செய்ய எதிர்ப்புகள் எழுவதாக பிரசாத் கவலை தெரிவித்தார்.

தலாக் முறை தொடர்பான வழக்கில் அதற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு பிரமாண பத்திரமாக உ‌ச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தது. இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தலாக்கிற்கு எதிரான அரசின் நிலைப்பாடு நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரா‌னது எனக் கூறியுள்ள அந்த அமைப்பு அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close