[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

முஸ்லிம் சட்ட வாரியம் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

government-accused-on-muslim-law-board

தலாக் விவகாரத்தை முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அரசியலா‌க்குவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய அரசு அனைவருக்கு பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டு மத்திய சட்ட வாரியம் கேள்வித்தாள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் சட்ட வாரியம் பொது சிவில் சட்டம் கொண்டு வர முனைவது மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுப்பது போன்ற நிலைபாடாகும் எனக் கூறியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது குறித்த கருத்துக் கேட்பு, அரசியல் ‌சட்ட அனுமதியுடன் நடைபெறுவதாகவும் இதை புறக்கணிக்கும் முஸ்லிம் சட்ட வாரியத்தின் முடிவு அதிருப்தி தருவதாகவும் கூறியுள்ளார். தனிநபர் தொடர்பான சட்டங்களை பொதுவானதாக மாற்றுவது குறித்த தங்கள் கருத்துகளை முஸ்லிம் சட்ட வாரியம் தெரிவிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் இவ்விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்தலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பொது சிவில் சட்டம் மக்கள் மீது திணிக்கப்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார். பொது சிவில் சட்ட கருத்து கேட்பு விவகாரமும், தலாக் விவகாரமும் தனித்தனியானவை என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close