[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

மேற்குவங்கத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்

west-bengal-forest-range-officials-in-belakoba-jalpaiguri-seize-snake-venom-worth-rs-250-crore-ar

மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டம், பெலகோபா பகுதியில் சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான பாம்பு விஷத்தை கடத்திய 4 பேரை வனத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் பைகுந்தாபூர் வனப்பகுதியில் இன்று நான்கு பேர் 5 கண்ணாடி குவளைகளில் பாம்பு விஷத்தை கடத்தி வந்தனர். இதனை அடுத்து மேற்குவங்க மாநில பைகுந்தாபூர் வனஅதிகாரிகள் சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான பாம்பு விஷத்தை கடத்திய 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்தகையை பதப்படுத்தப்பட்ட பாம்பு விஷம், விஷ முறிவு சிகிச்சை மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close