[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

காஷ்மீரில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

ssb-jawan-killed-8-others-injured-in-terrorist-attack

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், ஜகுரா நகரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமிற்கு வாகனங்களில் நேற்றிரவு வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இரவு 7.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8‌ வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் அனைவரும் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று முதல் நான்கு வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் குடியிருப்புப் பகுதிகள் அதிகம் இருந்ததால், பதில் தாக்குதல் நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அந்த பகுதியில் பதுங்கியிருப்பதையடுத்து, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ உயரதிகாரிகளிடம் கேட்டறிந்து உள்ளார்.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காஷ்மீரின் பாம்போர் நகரில் அரசு கட்டடத்திற்குள் பதுங்கி இருந்து பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 நாட்களாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close