[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

மும்பை தாக்குதலில் பலரது உயிரை காப்பாற்றிய போலீஸ் நாய் சீசர் உயிரிழப்பு

police-dog-caesar-who-saved-lives-during-26-11-dies

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். அப்போது பலரது உயிரை காப்பாற்ற காரணமாக இருந்த சீசர் நாய் நேற்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

மோப்ப நாய் சீசர், மும்பை போலீசின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் நீக்கல் பிரிவில், கடந்த 2005 முதல் 2013 வரை பணியாற்றியது. 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பயங்கரவாதிகள், மும்பையில் தொடர் தாக்குதல் நடத்தினர். அதில் 164 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அன்று மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தில் இரண்டு கையெறி குண்டுகளை கண்டுபிடித்து நிறைய பேரின் உயிரை காப்பாற்றியது சீசர் நாய். அத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த நரிமன் ஹவுசில் மூன்று நாட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அதுமட்டுமின்றி மும்பையில் கடந்த 2006ம் ஆண்டு ரயில் குண்டுவெடிப்பு மற்றும் 2001 ஜூலையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு ஆகிவற்றின் போது சிறப்பாக பணியாற்றியது.

தன்னுடன் பணியாற்றிய டைகர் நாய் உயிரிழந்ததையடுத்து சீசருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த ஜுனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் விலங்குகள் நல ஆர்வலர் பிஸாக் சாஷாவின் விலங்குகள் பண்ணையில் ஒய்வு காலத்தை கழித்து வந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் நேற்று காலை 9.30 மணி அளவில் சீசர் நாய் உயிரிழந்தது. இந்த தகவலை போலீஸ் அதிகாரி அசோக் தூதே தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close