[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

800 மரங்களை வெட்டிவிட்டு கட்டும் பாலம் தேவையில்லை: பெங்களூரூவில் எதிர்ப்பு

bengaluru-people-says-no-to-bridge-that-will-cost-1-800-crores-800-trees

ரூ.1800 கோடி செலவில் 800 மரங்களை வெட்டி உருவாக்கும் பாலம் எங்களுக்கு தேவையில்லை என்று பெங்களூரூவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐடி நகரமான பெங்களூரூவில் விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலில் சிக்காமல் எளிதாக விமான நிலையம் செல்லும் வகையில் 6.72 கிலோ மீட்டர் துரத்திற்கு இரும்பு பாலம் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. 1,791 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவின் பஸவேஸ்வரா சர்கிஸ் மற்றும் ஹெப்பல் இடையே இந்த பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 812 மரங்கள் வெட்டப்படும் என்றும், அதற்கு பதிலாக 60,000 மரக்கன்றுகள் நடப்படும் என்றும் கர்நாடக அரசு உறுதியளித்துள்ளது. அதுமட்டுமின்றி பெரிய மேம்பாலம், மேலும் கீழாக சாய்வுப்பாதைகள், 3 சுரங்கப்பாதைகள், வடிகால் அமைப்புகள், மேல்மட்ட சாலைகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளது.

ஆனால் மரங்களை வெட்டிவிட்டு பாலம் கட்டும் இத்திட்டத்திற்கு பெங்களூருவாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிலர் பாலத்திற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை பாலத்திற்கு எதிராக பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மேம்பாலத் திட்டத்தை எதிர்க்கும் சமூக ஆர்வலர் ப்ரியா ராஜகோபால் கூறுகையில்’ பாலம் தொடர்பான விஷயத்தில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை, இந்த திட்டத்தால் தற்போதைய பிரச்னைக்கு தீர்வு இருக்கும் என்று எப்படி கூற முடியும்’ என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close