[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

கேரளாவில் முழு அடைப்பு... தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்

today-bandh-at-kerala

கேரள மாநிலம் கண்ணூரில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் சார்பில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கண்ணூர் மாவட்டம் பிணராயி பகுதியை சேர்ந்த ரமீத் என்ற பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் நேற்று காலை ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை துவங்கியுள்ளது. இந்த நிலையில், ரமீத்தை கொலை செய்தது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கேரள பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கேரளாவில் முழு அடைப்புக்கு அம்மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதையொட்டி வாகனங்கள் இயங்காது எனவும், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மருத்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மட்டும் நடைபெற்று வருகிறது.

இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் களியக்காவிளையில் நிறுத்தப்படுகின்றன. முழுஅடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் தனியார் வாகனங்களும் இரு மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Kerla bjp protest bandh
Advertisement:
Advertisement:
[X] Close