[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

கேரள பள்ளியின் 2ம் வகுப்பு பாட புத்தகத்தில் மத நல்லிணக்கத்துக்கு எதிரான கருத்து.. போலீசார் வழக்குப்பதிவு

what-advice-will-you-give-if-your-friend-converts-to-islam-second-grade-textbook-asks

கேரளாவில் பீஸ் பப்ளிக் சர்வதேச பள்ளிகள் (Peace Public school) 13 இடங்களில் செயல்படுகின்றன. இஸ்லாமிய மத போதகர் எம்.எம். அக்பர் என்பவர் தலைமையின் கீழ் இந்த பள்ளிகள் செயல்படுகின்றன. எர்ணாகுளத்தில் செயல்படும் பீஸ் பப்ளிக் பள்ளியின் 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றுள்ளன. அந்த புத்தகத்தில் மாணவர்களுக்கு கேட்டக்கப்பட்டுள்ள கேள்வி பின்வருமாறு: ‘ஒரு வேளை உங்கள் நண்பர் ஆடம்/சுஷானே முஸ்லிம் மதத்திற்கு மாற விரும்புகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்.

கீழே காண்பவற்றில் ஒன்றை தேர்ந்தெடு

a. அவன்/ அவள் பெயர்களை அஹமத்/சாரா என்று உடனடியாக மாற்ற வேண்டும்

b. அவன்/ அவள் செயின் அணிந்திருந்தால் அதை கழற்ற வேண்டும்

c. ஷஹதத் (இஸ்லாமிய இறைநம்பிக்கையின் விசுவாச அறிக்கை) கற்க வேண்டும்

d. பெற்றோர்கள் முஸ்லிம் இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

e. ஹலால் சிக்கன் சாப்பிட வேண்டும்.’

இவ்வாறு கூறப்பட்டுள்ளது

இதில் ஷஹதத் ( இஸ்லாமிய இறைநம்பிக்கையின் விசுவாச அறிக்கை) என்பது இஸ்லாமியர்கள் பின்பற்ற போதிக்கப்பட்ட ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

இது தொடர்பாக செய்திகள் வந்ததையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பாடப்புத்தத்தில் கேள்வி அமைந்துள்ளதாக புகார்கள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து பீஸ் பப்ளிக் பள்ளி நிர்வாகம் மீது மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தாக கூறி , போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close