[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

கேரள முதல்வரின் சொந்த ஊரில் பாஜக தொண்டர் படுகொலை

bjp-worker-hacked-to-death-in-kerala-chief-minister-pinarayi-vijayan-s-home-town

கேரள மாநிலம் தலச்சேரி அருகே பினராயி நகரில் பாரதிய ஜனதா தொண்டர் ஒருவர் இன்று காலை படுகொலை செய்யப்பட்டார்.

கன்னூர் மாவட்டத்தில் பினராயி நகரில் பெட்ரோல் பங்க் அருகே பாஜக பிரமுகர் ரெமித்  என்பவர் சென்று கொண்டிருந்தார். அங்கு அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியுள்ளது. இதில் ரெமித்திற்கு தலை மற்றும் கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது, இதனால் அவர் உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதே கன்னூர் மாவட்டத்தில் 52 வயதான மார்க்சிஸ்ட் தொண்டர் மோகனன் என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரியாட் நகரில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில் பாஜக தொண்டர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ரெமித்தின் தந்தை சோடன் உத்தமன், கடந்த 2002 மே மாதம், கீழுர் அருகே படுகொலை செய்யப்பட்டார் என்று உள்ளூர் பாஜகவினர் தெரிவித்துள்ளனர். கன்னூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. பாஜக தொண்டர் கொல்லப்பட்ட பினராயி நகரம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த ஊர் ஆகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close