[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

நீதிமன்ற செயல்பாடுகளை வீடியோ பதிவு கோரும் மனு: மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

bombay-high-court-junks-petition-seeking-video-recording-of-court-proceedings

நாடெங்கிலும் உள்ள நீதிமன்றங்களின் செயல்பாடுகளை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மக்கள் நலன் கருதி அனைத்து நீதிமன்ற செயல்பாடுகள் முழுவதும், வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என நவ்நீத் கோஸ்லா என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த மஞ்சுளா செல்லூர், சோனக் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, நீதிமன்ற செயல்பாடுகளை வீடியோ பதிவு செய்வது குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கருத முடியாது எனக் கோரி வழக்கினை தள்ளுபடி செய்தது. அதேநேரம் குறிப்பிட்ட சில வழக்குகளில் தேவையின் அடிப்படையில் நீதிமன்ற செயல்பாடுகளை பதிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close