[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

பாம்பு பீதியில் தவிக்கும் கிராமம்! பாம்பு கடித்து 3 பேர் பலி; 52 பேர் காயம்

people-in-snake-panic-at-uttar-pradesh

உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் பகுதியில் உள்ள மிலக் கிராமத்தில் பாம்புகள் அதிகளவில் வருவதால் சமீபகாலமாக மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

‘பாம்பை கண்டால் படையும் அஞ்சும்’ என்பதற்கு மிலக் கிராமம் ஓர் உதாரணம். அப்பகுதியில் நடமாடும் பாம்புகளால் கடந்த ஒருவாரத்துக்குள் மூன்று பேர் பலியாகியுள்ளனர். பகல் நேரங்களில் குடியிருப்புப் பகுதியில் பாம்புகள் வருவதால் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் அனைவரும் கையில் கம்புகளுடன் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் பாம்பு பிடிக்க வரும்போது பாம்புகள் சிக்குவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

பாம்பாட்டியை வரவழைத்தபோது கருநாகம் ஒன்று பிடிபட்டதாகவும், ஆனால் அது உருமாறக் கூடிய இச்சாதாரி பாம்பு என்று கூறி அந்த பாம்பை அவர் மீண்டும் வயல்வெளியில் விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மிலக் கிராம மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.

இச்சாதாரி பாம்புகள் தன்னை துன்புறுத்தும் நபர்களை காத்திருந்து பழிக்குப்பழி வாங்கும் குணம் கொண்டது என பொதுமக்கள் பலராலும் நம்பப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close