[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை

ராவணனாக நவாஸ் ஷெரீப், அவரது மகன் மேக்நாத்தாக ஹபீஸ் சயீத்: லூதியானாவில் ராம் லீலா கொண்டாட்டம்

in-ludhiana-pakistan-pm-nawaz-sharif-is-ravan-hafiz-saeed-meghnath

9 நாட்கள் பண்டிகைக்கு (நவராத்திரி) பிறகு, ராவணனை ராமன் துவம்சம் செய்யும் ராம் லீலா வைபவம் விஜயதசமி அன்று(இன்று) நடத்தப்படும். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வித்தியாசமான முறையில் ராம் லீலா பண்டிகை கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பை ராவணனாகவும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ராவணனின் மகன் மேக்நாதனாகவும் சித்தரித்து இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஜம்மு & காஷ்மீர் மாநிலம் உரியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் 19 பேர் உயிரிழந்தனர். இதற்கு பின்னணியில் இருந்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை 10 தலை ராவணனாக சித்தரித்து பிரம்மாண்ட பொம்மை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 164 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ராவணணின் மகன் மேக்நாதனாக சித்தரித்து பிரம்மாண்ட பொம்மை அமைக்கப்பட்டுள்ளது. லூதியானாவில் உள்ள ஆசாத் தசரா குழு சார்பில் இந்த பிரமாண்ட பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close