[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

சியாச்சின் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ராணுவ வீரர் விரைவில் குணமடைய சிறப்பு வழிபாடு

siachen-survivor-battles-for-life-at-army-hospital-special-prayers

சியாச்சின் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா விரைவில் குணமடைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

வாரணாசியில், கங்கை ‌ஆற்றில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவிற்காக சிறப்பு வழிபாடு நடத்தினர். இதற்காக யாகங்கள் நடத்தப்பட்டன.

நாட்டை பாதுகாக்க கடும் பனியையும் பொருட்படுத்தாமல் சேவையாற்றிய ஹனுமந்தப்பா விரைவில் நலம் பெற வேண்டும் என பொதுமக்கள் வேண்டினர்.

சியாச்சின் பனிச்சரிவில் புதையுண்டு 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவிற்கு டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கரும் மருத்து‌மனைக்குச் சென்று ராணுவ வீரர் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

இதைத்தொடர்ந்து, ராணுவ வீரர் ஹனுமந்தப்பா விரைவில் நலம் பெற நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அமைச்சர் பரிக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close