[X] Close
JUST IN
இந்தியா 08 Oct, 2016 03:53 PM

எந்த தாக்குதலுக்கும் இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியும்...பாகிஸ்தான் மீது விமானப்படை தளபதி தாக்கு

iaf-chief-arup-raha-sends-tough-message-to-pakistan-says-we-have-ability-to-counter-all-threats

எல்லா தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்க இந்தியாவால் முடியும் என்று விமானப்படை தளபதி அனுப் ராஹா பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய விமானப்படையின் 84ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடந்தது. இதில் விமானப்படை தளபதி அனுப் ராஹா, ராணுவ தளபதி தல்பீர் சிங், விமானப்படையில் கவுரவப் பதவி வகிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய விமானப்படைத் தளபதி அனுப் ராஹா, பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் யூரி ராணுவ தளம் மீதான தாக்குதல்கள் போன்றவை எந்தமாதிரியான நெருக்கடியான சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைவூட்டுபவைகளாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், நமது படைத்தளங்கள் மீதான தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையிலான புதிய உத்திகளை பின்பற்ற உள்ளதாகவும் அனுப் ராஹா தெரிவித்தார். நாட்டின் வான்வெளியைப் பாதுகாக்கும் விமானப்படை, எந்த தாக்குதலையும் எதிர்க்கொண்டு முறியடிக்கும் விதமாக எப்போதும் தயாராக இருக்கும் என்றும் அவர் பேசினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசிய அவர், இதுதொடர்பாக நாடு முழுவதும் பலமான விவாதம் நடந்துவருவதாகக் குறிப்பிட்டார். இந்த தாக்குதல் குறித்து படைகள் விவாதிப்பதில்லை என்று குறிப்பிட்ட அவர், நாடு என்ன விரும்புகிறதோ அதை செயல்படுத்துவதே குறிக்கோள் என்று குறிப்பிட்டார்.

Advertisement:
Advertisement:
[X] Close