[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு

hyderabad-13-year-old-girl-dies-after-68-days-of-fasting

ஐதராபாத்தைச் சேர்ந்த 13வயது சிறுமி 68 நாட்கள் உண்ணா நோன்பு மேற்கொண்டு கடந்த வாரம் உயிரிழந்தார்

‘வடக்கிருத்தல்’ என்பது பண்டைத் தமிழகத்தில் உணவு, தண்ணீரை மறுத்து தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் நடைமுறை. இதேபோன்ற நடைமுறை ஜெயின் சமூகத்தில் ‘சந்தாரா’ என்ற சமயச் சடங்காகப் பின்பற்றப்படுகிறது.

ஐதராபாத்தைச் சேர்ந்த ஆராதனா என்ற 13வயது சிறுமி உண்ணா நோன்பிருந்து உயிர்துறக்கும் சமயச் சடங்கை மேற்கொள்ளும் முடிவை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து 66 நாட்கள் உண்ணா நோன்பை மேற்க்கொண்ட சிறுமி ஆராதனா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் இரண்டு நாட்கள் உண்ணா நோன்பை கடைபிடித்த ஆராதனா, 68 நாட்கள் முடிவில் உண்ணா நோன்பை கைவிட்டார். ஆனால் சிறுமி ஆராதனா சிகிச்சை பலன் இன்றி கடந்த வாரம் உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கை ‘ஷோபா யாத்ரா’ என்ற பெயரில் ஜெயின் சமூகத்தினர் அழைத்தனர். அந்த நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சிறுமி உயிரிழந்த விவகாரம் தற்போது வெளியே தெரிந்துள்ள நிலையில், குழந்தைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் படி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close