[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

இந்திய விமானப்படை தினம் கொண்டாட்டம்: சாகசம் செய்து வியப்பில் ஆழ்த்திய வீரர்கள்

national-air-force-day-celebration

விமானப்படை தினத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் காசியபாத்தில் வீரர்கள் சாகசங்களை செய்து காட்டினர்.

இந்திய பாதுகாப்பு படையின் ஒரு அங்கமாக விளங்கும் இந்திய விமானப் படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே தினம்தான் தொடங்கப்பட்டது. அன்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை நாளாக கொண்டாடப்படுகிறது.

விமானப்படை நாள் கொண்டாட்டத்தின் போது வீரர்கள் விண்ணிலிருந்து பாராசூட் ‌மூலம் குதித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். மேலும் விமானப்படை வீர்கள் நிகழ்த்திய பல்வேறு சாகசக் காட்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. காசியாபாத் அருகிலுள்ள ஹிந்தன் விமானப்படை தளத்தில் இந்த சாகசங்கள் செய்து காட்டப்பட்டன.

முன்னதாக வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை விமானப்படை தளபதி அருப் ராகா ஏற்றுக்கொண்டார். இதன் பின், சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாயு சேனா, விசிஷ்ட் சேவா ‌உள்ளிட்ட பதக்கங்களை வழங்கி தளபதி அருப் ராகா கவுரவித்தார். நிகழ்ச்சிகளின் இறுதியில் பேசிய தளபதி அருப் ராகா, ரஃபேல் போர் விமானங்களை சேர்ப்பது மூலம் இந்திய விமானப்படையின் வலிமை மேலும் கூடும் என தெரிவித்தார். தரைப்படைத் தளபதி தல்பீர் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்டெண்டுல்கர் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close