[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

ரயில் டிக்கெட்டுகள் வாங்க..கட்டண சலுகை பெற...ஆதார் கட்டாயம்: ரயில்வே நிர்வாகம் திட்டம்

train-ticket-booking-centers-aadhaar-mandatory-offer-to-get-tickets-federal-government-program

ரயில் டிக்கெட்டுகள் வாங்குவதற்கும், கட்டண சலுகை மற்றும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மட்டுமின்றி, கவுன்டரில் டிக்கெட் வாங்குவது, முன்பதிவு அல்லாத டிக்கெட் என எல்லாமே ஆதார் எண்ணை சமர்ப்பித்தால்தான் வாங்க முடியும் என்ற நடைமுறையை ரயில்வே விரைவில் செயல்படுத்த இருக்கிறது.

மூத்த குடிமக்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் என 53 பிரிவினருக்கு ரயில்வே துறை கட்டணச் சலுகைகளை அளித்து வருகிறது. இது போன்ற கட்டண சலுகைகளை பெறுவதற்கும், ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கும் ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது. அரசின் ஒப்புதலுக்கு பிறகு மிக விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று ரயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஐஆர்சிடிசி தலைவர் ஏ.கே. மனோச்சா கூறுகையில்,

மூத்த குடி மக்களுக்கு டிக்கெட் கட்டண சலுகை உண்டு. ஆண்கள் 40 சதவீதமும், பெண் கள் 50 சதவீதமும் கட்டண சலுகை பெறுகின்றனர்.இதுதவிர பல்வேறு பயணிகளுக்கும் சலுகை கட்டணம் உள்ளது. இதனால் ரயில்வேக்கு ஆண்டுக்கு 1,500 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, ஆதார் இருந்தால் மட்டுமே மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்குவது எனவும், இதை டிசம்பரில் நடைமுறைப்படுத்துவது எனவும் ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close