[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

இந்திய- பாக்., எல்லையை சீல் வைக்க பரிசீலனை: 4 மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சந்திப்பு

rajnath-singh-speak-about-kashmir-attack

பாகிஸ்தானுடன் எல்லையைக் கொண்டிருக்கும் நான்கு மாநில முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

ராஜஸ்தானின் ஜெய்சல்மர் நகரில் நடைபெறும் கூட்டத்தில், அந்த மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி, குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி, பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் பங்கேற்கின்றனர். எல்லைப் பாதுகாப்புப் படையின் உயரதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டுடன் இந்தியாவின் ஒட்டுமொத்த எல்லையையும் சீல் வைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளை ராஜ்நாத் சிங் நாளை நேரில் பார்வையிடவுள்ளார்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தொடர்ந்து எல்லையோர பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதால், பாதுகாப்பு குறித்த இந்த கூட்டத்திற்கு ராஜ்நாத் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close