[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

மோடி குறித்து விமர்சித்த ராகுல்காந்திக்கு கெஜ்ரிவால் கடும் கண்டனம்

kejriwal-slams-rahul-for-khoon-ki-dalali-remark-backs-pm-modi

பிரதமர் மோடி குறித்து விமர்சித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேத்தில் பேரணி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை தரகர் என்ற பொருள்படும்படி விமர்சித்திருந்தார். பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவத் தாக்குதல் குறித்து பேசியபோது ராகுல் இதை தெரிவித்திருந்தார். ரத்தம் சிந்தும் வீரர்களின் பின்னால் ஒளிந்திருந்து, அவர்களது தியாகத்தை தரகராக தனக்கு சாதகமாக பிரதமர் பயன்படுத்துவதாக ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, ராகுல் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர்கள், இந்திய அரசியலை ராகுலின் பேச்சு புதிய தாழ்வுக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close