[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான இடைக்காலத்தடை திரும்பப்பெறப்பட்டது
  • BREAKING-NEWS பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடும் வரை என்னுடைய மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் - பேரறிவாளன் தாய் அற்புதம்மாள்
  • BREAKING-NEWS தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன்; நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு - உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு
  • BREAKING-NEWS மத்திய மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும் - துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS குக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்
  • BREAKING-NEWS Videocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு
  • BREAKING-NEWS ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை

உளவுத்துறை எச்சரிக்கை: அதிமுக்கிய விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

airports-in-delhi-four-bordering-states-on-high-alert

பங்கரவாதத் தாக்குதல்கள் எந்தநேரத்தில் நடத்தப்படலாம் என உளவுத்துறை துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, டெல்லி, மும்பை, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட நாட்டின் அதிமுக்கிய விமான நிலையங்க‌ளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களோ அல்லது வேறு சதிச் செயல்களோ நிகழ வாய்ப்புள்ளதால் அதிகபட்ச பாதுகாப்பை ஏற்படுத்துமாறு அவ்விமான நிலைய நிர்வாகங்களுக்கு விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தியது. இதையடுத்து மேற்கு மாநிலங்கள் மற்றும் டெல்லி, ஐதராபாதில் உள்ள விமான நிலையங்களில் முழு உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிற் பாதுகாப்பு படை இயக்குனர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயன்ற 3 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close