[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அகற்றக்கோரி பாக்., ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்கள் ஆவேசம்

local-people-leaders-in-various-parts-of-pok-protest-against-terror-camps

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்களால் தங்கள் வாழ்க்கை நரகமாகி வருவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முசாபராபாத், கோட்லி, சினாரி, மி‌ர்பூர், கில்ஜித், தயாமர் மற்றும் நீலம் பள்ளத்தாக்குப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். பயங்கரவாத முகாம்களை ஒழிக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில பகுதிகளுக்கு மக்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் கில்ஜித் பகுதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தலிபான் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் முகாம்களை அகற்றாவிட்டால், உள்ளூர் மக்களே நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு உணவும், ரேஷன் பொருட்களும் வழங்கப்படுவதாகவும் உள்ளூர் தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் சிலவற்றை இந்திய ராணுவம் அண்மையில் தாக்கி அழித்த நிலையில், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக தற்போது குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close