[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

pakisthan-uri-attack

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 19 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர், சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் அதிரடி தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 7 பயங்கரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வப்போது எல்லைமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இந்திய ராணுவம் தரப்பில் இருந்து தக்க பதலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் உள்ள லேன்கேட் ராணுவ முகாம் மீது அதிகாலை 5 மணி அளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

இதனை அடுத்து ராணுவத்தினர் அந்த பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மீண்டும் 6.30 மணி அளவில் பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close