[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

குஜராத்தின் கட்ச் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் படகு சுற்றிவளைப்பு: 9 பேர் கைது

pakistani-boat-arressted-in-kutch-area

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான படகை சந்தேகத்தின் பேரில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை சிறைப்பிடித்தனர். மேலும் படகில் இருந்த சந்தேகத்திற்குரிய 9 பேரை கைது செய்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து கடந்தவாரம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய கமாண்டோ படை வீரர்கள் அங்கிருந்த பயங்கர முகாம்களை அழித்ததுடன் தீவிரவாதிகளின் மீதுதாக்குதல் நடத்தினர். இதனால் தற்போது எல்லையில் பதட்டம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் சர் கிரீக் கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சிறைபிடித்துள்ளனர். அந்த படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 பாகிஸ்தானியர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் படகில் மீன்பிடி சாதனங்கள் தவிர வேறு எந்த சந்தேகப்படும்படியான பொருட்கள் இல்லை என எல்லைப் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close