[X] Close
JUST IN
  • BREAKING-NEWS என் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்
  • BREAKING-NEWS பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு
  • BREAKING-NEWS ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

இசையை ஆயுதமாக்கும் பாகிஸ்தான்: எல்லை அருகே தரையிறங்கும் விமானங்களுக்கு புது சிக்கல்

music-latest-weapon-in-pak-arsenal

ஜம்மு காஷ்மீர் எல்லையை ஒட்டிய இந்திய பகுதியில் தரையிறங்கும் விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு இசை மூலம் பாகிஸ்தான் ஹேக்கர்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இரு நாடுகளின் எல்லையை ஒட்டிய ஜம்முவில் தரையிறங்கும் விமானிகள், ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு பேசும் அலைவரிசையை ஹேக் செய்யும் பாகிஸ்தான் ஹேக்கர்கள், அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவான பாடல்களை ஒலிக்க விட்டு தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

விமானப் படை விமானங்கள் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் மட்டுமே ஜம்முவில் இரு நாடுகள் எல்லையை ஒட்டிய பகுதிகளில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறக்கப்படும் பொழுது ஜம்முவில் உள்ள கட்டுப்பாட்டு அறையை விஎச்எஃப் எனப்படும் உயர் அலைவரிசையைப் பயன்படுத்தி விமானங்கள் தகவல்களைப் பறிமாறிக் கொள்கின்றனர். ஆனால், இந்த வகை அலைவரிசை ஹேக் செய்யும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் தகவல் பறிமாற்றத்தைக் குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு பாடல்களை ஒலிக்க விடுவதாக விமானிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், ஜம்மு கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளும் அலைவரிசையை அடிக்கடி மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தரையிறங்கும் கடைசி நேரத்தில் ஏற்படும் தகவல் பறிமாற்ற இடையூறு காரணமாக கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close