[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு

fight-for-justice-in-cauvery-dispute-will-continue

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக திருத்த மனுவை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்றும் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ள மத்திய அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஒரு பரிந்துரையாகவே தெரிவித்துள்ளதாகவும் கட்டாயம் என குறிப்பிடப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ள நிலையில் நாளை மதியம் மனு விசாரணைக்கு வர உள்ளது. கடந்த வாரம் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில் திடீரென மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என கூறியுள்ளது. இதனிடையே காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர் திறந்ததா இல்லையா என நாளை மதியம் 2 மணிக்குள் கர்நாடகா பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close